Advertisment

நீலகிரி சேர்மனின் பரபரப்பான பணி... பாராட்டும் மக்கள்...

n

கரோனோ வந்த நாள் முதல் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக இருந்து வந்தாலும், முற்றிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் மாவட்டமாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மூலம் உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதனால் நீலகிரி மக்கள் கரோனோ தாக்குதலில் இருந்து தற்காத்து கொண்டனர்.

Advertisment

இந்த நிலையில், உணவுக்காக ஏங்கும் நீலகிரி மக்களுக்கு உதவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி விட, நீலகிரி திமுகவினர் களத்தில் இறங்கி அரிசி, காய்கறிகளை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

Advertisment

தமிழ்நாட்டிலேயே முதல் ஆதிவாசி, பழங்குடியினர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி பொன். தோஸிடம், திமுக தலைவர் ஸ்டாலின், காணொளி மூலமாக, ’மக்களுக்கு உதவுவதில் நீங்கள் முக்கியமாக இருக்க வேண்டும்’ என்றார்.

உடனே, நீலகிரியில் உள்ள 35 கிராமங்களுக்குள் காய்கறிகளை பல டன் கணக்கில் இறக்கி, பொதுமக்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டது பொன். தோஸ் உடன் பிறப்புகள். திமுகவின் சமூக பணியை பார்த்து அப்பகுதி மக்கள் மகிழ்ந்தனர்.

nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe