தி.மு.கவில் இணைந்த அமைச்சரின் அண்ணன் மகன்!

DMK HEAD NEWS

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்முன்னிலையில் இன்று (16.9.2020), மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ஈரோடு வடக்கு மாவட்டம், அ.தி.மு.க. அமைச்சர் கே.எஸ்.செங்கோட்டையனின் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன் (தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கச் செயலாளர் - அகில இந்திய மருந்து வணிகர் சங்கப் பொருளாளர்), கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் கோபி ஆர்.துரைசாமி ஆகியோருடன் தி.மு.க.வில் இணைந்தார்.

அப்போது, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம், கோபி நகரச் செயலாளர் என்.ஆர்.நாகராஜ், கோபி ஒன்றியச் செயலாளர் எஸ்.ஏ.முருகன், நம்பியூர் ஒன்றியப் பொறுப்பாளர் பி.செந்தில்குமார், டி.என்.பாளையம் ஒன்றியப் பொறுப்பாளர் எம்.சிவபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

admk sengottaiyan stalin
இதையும் படியுங்கள்
Subscribe