Advertisment

கடலூர் மாநகராட்சியை கைப்பற்றிய திமுக!

DMK has won Cuddalore Corporation!

Advertisment

தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சிகளில் அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128 நகராட்சிகளிலும், அதிமுக 6 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 489 பேரூராட்சிகளில், திமுக கூட்டணி 358 பேரூராட்சிகளிலும், அதிமுக 24 பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன.

கடலூர் மாநகராட்சி 45 வார்டுகளை கொண்டது. இதில் திமுக 30 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், விசிக 3 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்தில், சுயேச்சைகள் 3 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும், பாமக 1இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 30 இடங்களில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த பெண் ஒருவர் மேயர் நாற்காலி அமரப் போகிறார்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe