இன்று தமிழக பா.ஜ.க செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டாதமிழகத்தின் வளர்ச்சியை தி.மு.க தடுப்பதாகச் சாடியிருந்தார். இதற்குப் பதிலளித்ததி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும்ஒரே எதிரிபா.ஜ.கதான் என பதில் விமர்சனம் வைத்திருந்தார்.
பா.ஜ.க -தி.மு.க இடையேவிமர்சன போட்டி நிகழ்ந்துள்ள நிலையில்அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது,"தேர்தல் காரணமாக இந்துக்களை சமாதானப்படுத்ததி.மு.கமுயற்சி செய்கிறது. அதேபோல, கந்தசஷ்டி விவகாரத்தில் எதிர்ப்பு எழுந்ததால் வேறு வழியின்றி நிலைப்பாட்டைதி.மு.கமாற்றியுள்ளது" என்றார்.
மேலும் "கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என துணைமுதல்வர் ஓ.பி.எஸ் கூறியது சரியானது. தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி குறித்துவிரைவில் முதல்வர் அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்.