Advertisment

'திமுகவே துரோகம் செய்துவிட்டது...' சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்!

'DMK has betrayed ...' Congress party involved in road blockade!

Advertisment

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிவரும் நிலையில், சில இடங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே திமுக வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தலைமையின் அறிவிப்புக்கு மாறாக செயல்படுவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் சில இடங்களில் குற்றச்சாட்டை வைத்துள்ளன.

தருமபுரியில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் விசிக வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் சாந்தி புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார். விசிக வேட்பாளரை திமுக வேட்பாளர் வீழ்த்தி வெற்றி பெற்றதால் விசிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கடலூர் மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸைவீழ்த்தி திமுக வெற்றி பெற்றுள்ளது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் வேல்முருகனுக்கு 7 வாக்குகள் கிடைத்த நிலையில் திமுகவின் சம்சாத் பேகம் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக துரோகம் செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் விசிகவை வீழ்த்தி திமுக வெற்றிபெற்றது. அங்கு விசிகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிரிஜா 3 வாக்குகள் பெற்ற நிலையில் திமுகவின் ஜெயந்தி 23 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பிரமணியத்தை வீழ்த்தி திமுக வேட்பாளர் குமார் வெற்றிபெற்றார்.

vck congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe