தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'ஓயா உழைப்பின் ஓராண்டு- கடைக்கோடித் தமிழரின் கனவுகளைத் தாங்கி' என்ற காலப்பேழை புத்தகத்தையும், 'ஓயா உழைப்பின் ஓராண்டு- நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்' என்ற ஓராண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்.
இந்த நிகழ்வின் போது, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. ஆகியோர் உடனிருந்தனர்.