இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா தொற்று சில தினங்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டுள்ளது. துரைமுருகன் 2வது டோஸ் கரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்ட நிலையிலும் அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.