தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் ஞானசேகரன், பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. செய்தி தொடர்பாளராக ஆர்.டி. அரசக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. மருத்துவ அணி இணை செயலாளராக இரா.லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்'இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யான லட்சுமணன் அண்மையில் தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.