ADVERTISEMENT

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.!

07:36 AM Nov 06, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில் உள்ள 23.72 லட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில் உள்ள 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெரு விளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம், 14-வது நிதிக்குழு மற்றும் மாநில நிதிக்குழு நிதியில் இருந்து 969.32 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது. இதில், அதிக விலைக்கு எல்.இ.டி. விளக்குகளை கொள்முதல் செய்ததன் மூலம் 500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பியிருந்தார்.

இந்தப் புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளித்துள்ளதாகக் கூறி, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், தனது புகாரை ஆளுநருக்கு அனுப்பி, அவரது ஒப்புதலைப் பெற்று, அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT