Skip to main content

அந்த ஆண்டவனே வந்தாலும் எடப்பாடி அரசை காப்பாற்ற முடியாது! -முன்னாள் அமைச்சர் ஐ.பி.பேச்சு!!

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

திண்டுக்கல் பாராளுமன்ற  தொகுதியில் திமுக சார்பில் வேலுச்சாமியும், நிலக்கோட்டை  சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக சௌந்தரபாண்டியன் போட்டி போடுகிறார்கள்.  

 

 

இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி திண்ணைப் பிரச்சாரம் மூலமும் ஆதரவு திரட்டி வருகிறார். 

     

dmk

 

நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வத்தலகுண்டு ஒன்றியத்தில் உள்ள தும்மலப்பட்டி, மேட்டூர்  ஊத்தங்கரை புதுப்பட்டி, குரும்பப்பட்டி,கோம்பபட்டி, குளிப்பட்டி, குன்னுவாரயன்கோட்டை  உள்பட சில பகுதிகளுக்கு கழகத்தின் துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ .பெரியசாமியும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணியும் சென்று அப்பகுதி மக்களை அங்கங்கே திரட்டி திண்ணைப் பிரச்சாரம் மூலம் கலைஞர் செய்த திட்டங்களையும், செய்த சலுகைகளையும் சொல்லி அப்பகுதி வாக்காள மக்களிடம் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கும் அதுபோல் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டி போடும் திமுக வேட்பாளரான சௌந்திர பாண்டியனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப் போட வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

     

அப்பொழுது தும்மலப்பட்டி பொதுமக்களிடம்  முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமிபேசும் போது... 

 

வத்தலக்குண்டு யூனியன் சேர்மனுக்கு இந்தப் பகுதியில் நான் முதன்முதலில் போட்டி போட்ட போது என்னை வெற்றி பெற வைத்தீர்கள். அந்த நன்றியை இப்ப வரை மறக்காமல் இருந்து வருகிறேன். அதுபோல் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடும் வேலுச்சாமிக்கும்,  நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தொகுதியில் போட்டியிடும் சௌவுந்திர பாண்டியனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களித்துஅமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

 

இதுவரை இந்த நிலக்கோட்டை தொகுதியில் தொகுதி பக்கம் வராதவர்களுக்கும், தொகுதியில் நன்றி சொல்லாத வர்களுக்கும், அடையாளம் தெரியாதவர்களுக்கும் வாக்களித்து வந்தீர்கள். இந்த முறையாவது உங்களை நாடி வந்துள்ள எங்களுக்கு வாக்களியுங்கள் மத்தியில் இருக்க கூடிய மோடி அரசும், மாநிலத்தில் இருக்கக்கூடிய எடப்பாடி அரசும் மக்களின் விரோத அரசாக தான் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இந்த தேர்தலுக்குப் பிறகு அந்த ஆண்டவனே வந்தாலும் இந்த எடப்பாடி அரசை காப்பாற்ற முடியாது. 

 

 

மத்தியில் வரக்கூடிய காங்கிரஸ் அரசும் தேர்தல் அறிக்கைகளை மக்களுக்கு அறிவித்து உள்ளது. அதில் முக்கியமான திட்டம் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதுபோல் மக்களுக்கு வருடத்திற்கு 72 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அதாவது மாதம் 2000 ரூபாய்வீதம் அதுபோல் நிறுத்திவைக்கப்பட்ட முதியோர் தொகை அனைத்தும் உங்கள் வீடு தேடி கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்  முதியோர் உதவித்தொகை கிடைக்க சட்டம் கொண்டுவரப்படும் என தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார்.

 

அதுபோல் வங்கிகளில் பெண்கள் 50 ஆயிரம் வரை தொழில் சிறு தொழில் செய்வதற்கு தாங்களாகவே போய் கடன் வாங்கிக் கொள்ளலாம். அது போல் 100 நாள் திட்டத்தை 150 நாள் ஆக உயர்த்தி சம்பளமும் 300 ரூபாயாக கொடுக்க இருக்கிறார்கள். இப்படி அகில இந்திய காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தேர்தல் அறிக்கை மூலம் மக்களுக்கு பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். அதன் மூலம் நீங்கள் கூடிய விரைவில் பயனடையப் போகிறார்கள் என்று கூறினார்.

 

 

இந்த திண்ணை பிரச்சாரத்தின்போது மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் முருகன், ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் ஜோதிஸ்ஈஸ்வரன், கூடலூர் ராஜா.அமபாத்துரைரவி, விவேகானந்தன் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.