நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி (62). அவரது கணவன் முருகசங்கரன் (72), மற்றும் வேலைக்கார பெண் என 3 பேரையும் ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்து விட்டு, தங்க நகைகளை கொள்ளை அடித்த கும்பல் வடநாட்டு கொள்ளைக்காரர்கள் என்று விசாரணை நடந்து வரும் நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பாக நெல்லையை சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாள் மதுரையில் கூடல் நகரில் உள்ள தன் மகள் வீட்டிற்க்கு வந்திருந்தபோது, அவரிடம் போலீசார் விசாரணை நடத்துவதாக மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக போலீசார் இந்த கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சீனியம்மாளை இன்று காலையில் இருந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.