நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் அனுமதியளித்து இருக்கும் நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் விவசாயிகள்,விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில்வேளாண் மசோதாக்களுக்குஎதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வழக்குத் தொடர்ந்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது தி.மு.க சார்பில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.