DMK leader who restored the community hall of the dark community people!

கடலூர் மாவட்டம்கிள்ளை பேரூராட்சியில் கடந்த 2004 சுனாமிக்குப் பிறகு அதே பகுதியில் வசித்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன் முயற்சியால் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் சமுதாய கூடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டன. பல வருடங்கள் ஆனதால் அவை பெரும்பாலும் பராமரிப்பில்லாமல் பழுதடைந்துள்ளது.

Advertisment

இதில் தளபதி நகர், இருளர் குடியிருப்புப் பகுதியில் உள்ள சமுதாய கூடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது.இதில்அந்தப் பகுதி மாணவர்களுக்கு டியுசன் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், ரவீந்திரனின் வேண்டுகோளை ஏற்று பேராயர் எஸ்ரா சற்குணம் தலைமையில் சென்னையில் இயங்கும்Evangelical church of India என்ற நிறுவனம் இந்த சமுதாய கூடத்தைப் பழுதி நீக்கி புதுப்பித்துத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பணிகள் நடைபெறுவதைப் பார்வையிடச் சென்ற கிள்ளை ரவீந்திரனுக்கு இருளர் சமூக மக்களும் சமுதாய கூடத்தில் கல்வி பயிலும் இருளர் சமூக மாணவர்களும் கை கூப்பி நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Advertisment