தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. தொடங்கியது. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், ம.செ.க்கள், அணிகளிம் நிர்வாகிகள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். திமுக செயற்குழுவில் கலந்து கொள்பவர்களுக்கு அரசின் துறைரீதியிலான சாதனைகளை விளக்கும் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் புத்தகம்வழங்கப்பட்டது.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
'1. செயற்குழுக் கூட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி- அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2. பேரிடர் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல் - தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதற்கு செயற்குழு கண்டனம். ஒன்றிய அரசு பேரிடர் நிதிஎன்பது பா.ஜ.க.வின் கட்சி நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி - இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை விரைவில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிட வேண்டும்.
3. நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு அதிகாரத்தின் துணை கொண்டு, அழிக்க முடியாத இழுக்கை ஏற்படுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை அவசர அவசரமாககொண்டு வருவதற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத்தெரிவித்துக் கொள்கிறது. “ஒரே நாடு - ஒரேதேர்தல்” மசோதாவிற்கு திராவிட முன்னேற்றக் கழகநாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு பதிவு செய்து - அதற்கு பணிந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு இந்த மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுப்பியிருந்தாலும் - ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திணிக்க அறிமுகம்செய்யப்பட்டுள்ள. இந்த மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும்
4. டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்தஅதிமுகவும், மாநில உரிமைகளைப் பறிக்கும் அப்படியொருசட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி டங்ஸ்டன் கனிமஏலம் விட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும் போடும் கபட நாடகத்திற்கு திமுக செயற்குழு கண்டனம்!
சட்ட திருத்தம் மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்குவந்த போது, “அதிமுக இந்த மசோதாவை ஆதரிக்கிறது” (Our ADMK Party Supporting this bill) என்றும், “இச்சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ள துறைஅமைச்சரை பாராட்டுகிறேன்” (Appreciate the Honble Minister for having brought up this bill) என்றும் டங்ஸ்டன்கனிம ஏல முறையை ஆதரித்து மாநிலங்களவையில்பேசியதும், வாக்களித்ததும் அதிமுக !
இச்சட்டதிருத்தம் வந்த போதே கடுமையாக எதிர்த்து மக்களவை, மாநிலங்களவைகளை நடத்த விடாமல் குரல் கொடுத்து - வெளிநடப்பும் செய்து எதிர்ப்பை காட்டியது திராவிட முன்னேற்றக் கழகம். டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் பற்றி தகவல் வந்தவுடனேயே எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியது திராவிட மாடல் அரசு.
அதன்பிறகு இதற்காக போராடிய மக்களிடம் சென்று இந்த ஏலத்தை அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்தது திராவிட மாடல் அரசு. கொடுத்த வாக்குறுதிப்படி பிரதமருக்கு கடிதம் எழுதி இந்த டங்ஸ்டன் கனிம ஏலத்தை எதிர்த்ததோடு - சமீபத்தில் நடைபெற்ற மழைகால கூட்டத் தொடரில் சட்டமன்றத்தில் எதிராக தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது -“நான் முதலமைச்சர் பதவியிலிருக்கும் வரைடங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு மாநில அரசு அனுமதிஅளிக்காது” என்று துணிச்சலாக சட்டமன்றத்தில் அறிவித்தார் நமது திராவிட மாடல் முதலமைச்சர்.
“டங்ஸ்டன் கனிமத்தை ஏலம் விடும் உரிமையை எடுத்துக்கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும்” “அப்படி பறித்துக்கொள்ள வாக்களித்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம்செய்த அதிமுகவும்” கைகோத்துக் கொண்டு உருவாக்கியடங்ஸ்டன் பிரச்சினையை மறைத்து கபட நாடகம் போடும்அதிமுகவிற்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
5. கல்வித்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் திட்டமிட்டு வஞ்சிக்கும் ஒன்றிய அரசின்பாரபட்சமான அணுகுமுறைக்கு கடும் கண்டனம்.
உயர்கல்வி பயிலும் இருபால் மாணவர்களின் விகிதாச்சாரத்தில் இந்தியாவின் சராசரி 28.4%ஆக மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 47% என மிக உயர்ந்த அளவில்இருப்பதுடன், இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தர வரிசையிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ள நிலையில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க வேண்டிய நிதியை பாரபட்ச அணுகுமுறையுடன் ஒன்றியபா.ஜ.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
6. குலத்தொழிலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் விஸ்வகர்மாதிட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாது என்று கடுமையாக எதிர்த்து பிரதமருக்கும், அந்த துறை சார்ந்தஒன்றிய அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ள திராவிட மாடல்அரசு, “விஸ்வகர்மா திட்டத்திற்குப் பதில் சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டாத அனைத்து கைவினைஞர்களும் உள்ளடக்கிய ‘கலைஞர்கைவினைத் திட்டத்தை’ தொடங்கி வைத்துள்ளது.
7. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிசமத்துவத்தைக் குறளாகத் தந்த அய்யன் திருவள்ளுவர்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினைபெருமிதத்துடன் கொண்டாடுவோம். அய்யன் வள்ளுவரின் சிலையின்வெள்ளிவிழாச் சிறப்பைப் பெருமிதத்துடன் வெளிப்படுத்தும்வகையில் டிசம்பர் 30, 31 ஆகிய நாட்களில்கன்னியாகுமரியில் உலகப் பொதுமறை தந்தஅய்யன் திருவள்ளுவர் சிலையை ‘பேரறிவுச் சிலை’யாக(Statue of Wisdom) போற்றிடும் வகையில் தமிழ்நாடுமுழுவதும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவைமுன்னெடுத்து, சமத்துவத்தை நிலைநாட்டுவோம் என செயற்குழு தீர்மானிக்கிறது.
8. தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத பிற ஆதிக்ககலாச்சாரங்களை முறியடிக்கும் முறையிலும் தை முதல் நாளன்று தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளைத் தமிழர்பண்பாட்டுத் திருநாளாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளெங்கும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடி, தமிழர் பண்பாட்டிற்கு ஆரியக்கலை-இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்டிட வேண்டும்.
9. 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் 200 இடங்களில் - ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதி செய்வீர் என்று கழக உடன்பிறப்புகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது'இவ்வாறாகதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/a1953.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/a1954.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/a1947.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/a1948.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/a1950.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/a1949.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/a1951.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/a1952.jpg)