திமுக நிர்வாகி வெட்டிக்கொலை... வானூரில் பரபரப்பு!

DMK executive attacked...Commotion in Vanur!

நேற்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக நிர்வாகி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருந்த நிலையில் தற்பொழுது விழுப்புரத்தில் திமுக நிர்வாகி ஒருவர் அதேபோல் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜெயக்குமார். திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகவும் ஜெயக்குமார் உள்ளார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இடைமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஜெயக்குமாரை தாக்க முற்பட்டுள்ளது. இதனால் அவர் ஓட்டம் பிடித்தார். இருப்பினும் விடாத அந்த கும்பல் ஓட ஓட துரத்தி வெட்டி படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. அருகிலிருந்தவர்கள் ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

admk incident police Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe