DMK Election Reporting Committee hearing in Dharmapuri and Krishnagiri districts!

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் நேற்று தர்மபுரி மாவட்டம் கட்சி அலுவலகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தில் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு மா.செ.தடங்கம் சுப்பரமணியும், மேற்கு மா.செ.இன்பசேகரன் முன்னிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை மனுவின் மூலமாக பெட்டியில் போடப்பட்டது.

Advertisment

இதில் மிக முக்கியமான கோரிக்கைஅதியமான் கோட்டையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும். ஒகேனக்கலிருந்து வெளியேறும் உபரி நீரை 15 ஏரிகளில் நிரம்ப வழிவகை செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கான படித்த மாணவ, மாணவிகளுக்கு பயன்பெரும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்என்பவை.இதேபோல அனைவரின் கோரிக்கையும் பெற்றுக்கொண்ட திமுக தேர்தல் அறிக்கை குழுஅடுத்த மாவட்டமான கிருஷ்ணகிரிக்கு பயணித்தது.

கிருஷ்ணகிரி கிழக்கு மா.செ. செங்குட்டவன், மேற்கு மா.செ. தலி பிரகாஸ் ஆகியோரின் முன்னிலையிலும் தேர்தல் அறிக்கைகளை மனுவாக கொடுத்து வருகின்றனர். இதில் முக்கியமாக கிருஷ்ணகிரியில் உள்ள வனப்பகுதிகளை சுற்றிலும் சுவர் எழுப்பி சரியான முறையில் பாதுகாப்பட்டு, வன விளங்குள் செல்லும்படி தனி பாதை அமைக்கப்பட வேண்டும். கிரானைட் கொள்ளைபோகும் மலைகளை மீட்டு எடுக்கவேண்டும். அதே போல ஊத்தங்கரை வட்டத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். அதே போலவே கிருஷ்ணகிரியுள்ள மருத்துவமனையை போலவே உத்தங்கரை மருத்துவமனையை தரம் உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கையை முன்வைத்து மனுவை வழங்கினார்கள்.

Advertisment