சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர்துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் சென்னைக்கு எடுத்து சென்றால் வேலூர் மாவட்டம் தழுவி திமுக போராட்டம்நடத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
65 கோடி ரூபாய் செலவு செய்து ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் எடுத்துவரமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு உத்தரவை நேற்று பிறப்பித்திருந்தார்.இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.