/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_954.jpg)
இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் மீண்டும் பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. துரைமுருகன் 2வது டோஸ் கரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்ட நிலையில், அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது அவர் சென்னை, கோட்டூர்புரம் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தற்போது அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)