DMK duraimurugan

Advertisment

பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக கடந்தமாதம் 31 தேதி தகவல்கள் வெளியாகி இருந்தன.அண்மையில் டெல்லிசென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியது. மெட்ரோ ரயில் விரிவாக்கம்,காவிரி- குண்டாறுஉள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார் என்ற தகவலும்வெளியாகியிருந்தது.

இந்நிலையில் பழைய திட்டங்களையே பிரதமர் மோடி துவக்கி வைக்க இருப்பதாக திமுகபொதுச்செயலாளர் துரைமுருகன்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, '2009 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி - குண்டாறு திட்டத்தையே பிரதமர் மோடி மீண்டும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி திறந்து வைப்பதற்காக அதிமுக அரசு ஏற்பாடு செய்திருப்பது கடைந்தெடுத்த அரசியல் மோசடி. காவிரி - குண்டாறு உட்பட மூன்று திட்டங்கள்திமுகஆட்சியில் தொடர்ந்திருந்தால் என்றைக்கோ முடிந்திருக்கும்' எனத்தெரிவித்துள்ளார்.