Advertisment

தி.மு.க. பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு... திருச்சியில் திரண்ட தி.மு.க.வினர்...

DMK duraimurigan visit trichy

Advertisment

தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல கட்சித் தலைவர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்தாலும், ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் புதிய திட்டங்களும் அறிக்கைகளும் கொண்டுவருவார்கள். அதன்படி இன்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவருக்கு தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வருகையின் நோக்கம் திருச்சி மாவட்டத்தில் பொது கணக்குக் குழு ஆய்விற்காக வந்திருப்பதாகவும் மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதை மேம்படுத்துவது தொடர்பான இன்னும் அனேக பிரச்சனைகள் குறித்தும் விவாதிப்பதற்காக வந்துள்ளதாக தி.மு.க. வட்டம் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எம்.சேகரன், பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், மலைக்கோட்டை மதிவாணன், பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர்.

duraimurgan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe