நாளை ஆளுநரைச் சந்திக்கிறார் துரைமுருகன்!

dmk durai murugan meet governor for tomorrow

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை (19/02/2021) மாலை 05.30 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கிறார் தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகன்.

பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும் ஆளுநரைச் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பின் போது, அமைச்சர்கள் ஊழல் செய்ததாக ஏற்கனவே தி.மு.க. குற்றம்சாட்டிய நிலையில், இரண்டாம் கட்ட பட்டியலை துரைமுருகன் தலைமையிலான குழு ஆளுநரிடம் அளிக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 22- ஆம் தேதி 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் தி.மு.க. அளித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.

duraimurugan Governor Panwarilal Purohit
இதையும் படியுங்கள்
Subscribe