Skip to main content

வேலூர் மண்டல திமுக மாநாடு –கூட்டணி கட்சியினரை மேடையேற்ற முடிவு

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

திமுக மண்டல மாநாடுகளை நடத்துகிறது. அதன்படி மார்ச் 17ந்தேதி வேலூரில் மண்டல மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பொறுப்பை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனிடம் ஒப்படைத்துள்ளார் தலைவர் ஸ்டாலின்.

 

t

 

வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திமுக மண்டல மாநாடு நடைபெறுகிறது. அது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை மா.செவுமான எ.வ.வேலு, விழுப்புரம் மா.செ. அமைச்சருமான பொன்முடி, காஞ்சிபுரம் மா.செவும், முன்னாள் அமைச்சருமான அன்பரசன்,  வேலூர் மத்திய மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ, வேலூர் கிழக்கு மா.செ. காந்தி எம்.எல்.ஏ, மேற்கு மா.செ முத்தமிழ்செல்வி, திருவண்ணாமலை வடக்கு மா.செ சிவானந்தம், விழுப்புரம் வடக்கு மா.செ மஸ்தான், மேற்கு மா.செ அங்கையர்கண்ணி, சேலம் மா.செகளான வீரபாண்டிராஜா, சிவலிங்கம், கிருஷ்ணகிரி மா.செ செங்குட்டுவன், தருமபுரி தடங்கம் சுப்பிரமணி போன்றோர் கலந்துக்கொண்டனர்.

 

p

 

வேலூரில் மாநாடு எங்கு நடத்துவது, எப்படி நடத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடலுடன், இந்த மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்றி அவர்களையும் பேசவைக்க திட்டமிட்டுள்ளார் தலைவர். அதனால் அதற்கு தகுந்தார்போல் கூட்டத்துக்கான மேடை அமைப்பது, தொண்டர்களை திரட்டிவருவது போன்ற பணிகளை கவனிக்க வேண்டும் என பேசியுள்ளனர். அதோடு, மாநாடு நடைபெறும் நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தால், அவர்களையும் மேடையேற்றலாமா என ஆலோசித்துள்ளனர். இதுதொடர்பாக தலைவரிடம் தெரிவிப்போம் என்றும் முடிவு செய்துள்ளனர். 

 

விருதுநகரை மிஞ்சும் வகையில் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்