Advertisment

“முழுமையாக செயலாற்றுகின்ற சக்தி திமுகவிற்கு இல்லை” - ராஜன் செல்லப்பா பேட்டி 

nn

திமுக வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடும். அதற்கு முழுமையாக செயலாற்றும் சக்தி இல்லை என ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்.

Advertisment

செய்தியாளர்களைச் சந்தித்த ராஜன் செல்லப்பா பேசுகையில், “மதுரையில் தொழில் வளர்ச்சி குறைந்திருக்கிறது. அதிமுகவோ திமுகவோ யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் மதுரைக்கு தொழில் வளர்ச்சி வேண்டுமென்று கேட்டுக்கொண்டே இருப்போம். மதுரை கோவில் மாநகரமாக இருப்பதால் சில தடங்கல்கள் ஏற்பட்டு விட்டது. ஆனால் காலம் மாறுகின்ற சூழலில் மதுரைக்கு தொழில் கட்டாயம் வேண்டும் என்று ஆண்டுதோறும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். டைடல் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டாலும் சரி, மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட்டாலும் சரி அதிமுகவின் எடப்பாடி அறிவித்தால் அதை செயலாற்றிக் காட்டினார். ஆனால் அதே திமுக ஆட்சியில் எந்த அறிவிப்பு வந்தாலும் அதை செயல்படுத்துவதற்கான அறிகுறிகள் எப்போதும் இருப்பதில்லை. குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டத்தின் திட்ட அறிக்கை வெளியிடப்படவில்லை. அந்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு பின்னர் தான் இன்று ஒதுக்கீடு செய்வதாக சொல்லி இருக்கிறார்கள்.

Advertisment

600 கோடியில் அறிவிக்கப்பட்டிருக்கும் டைடல் பார்க்கிற்கு இன்னும் இடமே தேர்வு செய்யப்படவில்லை. அவர்கள் ஒரு நூலகத்தை திறந்தார்கள் அதற்கே இடத்தை பிடிப்பதற்கு படாத பாடுபட்டு பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே இன்னும் கட்டி முடிக்கப்படாத சூழ்நிலையில் இருக்கிறது. எனவே திமுகவின் ஆட்சியைப் பொறுத்தவரை சொல்வதை செய்வதில்லை. வெறும் அறிவிப்புகளோடு நிற்பார்கள். ஏன் இடம் கிடைக்கவில்லை என்று கேட்டால் தகுதியுள்ள இடத்தை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வார்கள். எப்படி உரிமை தொகையை தகுதி உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களோ அதுபோன்றுபல்வேறு திட்டங்களுக்கு முழுமையாக செயலாற்றுகின்ற சக்தி திமுகவிற்கு இல்லை”என்றார்.

madurai TNGovernment admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe