DMK district secretaries meeting begins!

உள்ளாட்சி தேர்தல் எதிர்கொள்வது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

Advertisment

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசிக்க ஏற்கனவே தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டு இன்று அக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதன்படி தற்போது திமுக மாவட்ட செயலாளர்கள் துவங்கியுள்ளது. அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.