Skip to main content

2,500 ரூபாய் பொங்கல் பரிசைப் பார்த்து ஏமாந்து விட வேண்டாம்!- தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு... 

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

dmk dhayanidhi maran mp speec at salem district


ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக கொடுக்கப்படும் 2,500 ரூபாயைக் கண்டு மக்கள் ஏமாந்து விடக்கூடாது; அது, வரியாக நீங்கள் செலுத்திய பணம்தான் என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறினார். சேலத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

 

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை, சேலம் வடக்கு, தெற்கு தொகுதிகளில் திங்களன்று (ஜன. 4) நடந்தது. தயாநிதிமாறன் எம்.பி. பரப்புரையில் ஈடுபட்டார்.

 

வெங்கடாசலம் காலனியில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெசவாளர்களின் குறைகளைக் கேட்டறிந்த தயாநிதி மாறன் எம்.பி., அவர்கள் மத்தியில் பேசியது: "நான் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருந்தபோது நெசவாளர்களுக்குப் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செய்துள்ளேன். எனக்கு உங்களின் கஷ்டங்கள் புரியும். நெசவாளர்கள் அதிகமாக வசிக்கும் சேலத்தில் கூட ஜவுளிப் பூங்கா அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், இதற்கு பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் கண்டிப்பாக சேலத்தில் ஜவுளிப் பூங்கா கொண்டு வரப்படும். 

 

கரோனா ஊரடங்கால் நெசவாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நேரத்தில் நூல் விலையேற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. முன்பு, சீனாவில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்யப்படுவதால் நூல் விலை உயர்ந்துள்ளதாக சொன்னார்கள். இப்போது குஜராத்தில் இருந்து நூல் வந்தும் விலை குறைந்தபாடில்லை. இந்த அரசின் திட்டங்கள் அனைத்தும் முதலாளிகளுக்கு மட்டுமே லாபமாக உள்ளது. இதனைப் போக்க தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நூல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

dmk dhayanidhi maran mp speec at salem district

 

நமது பிள்ளைகள் படித்தால்தான் நமது குடும்பம் உயரும். நம் தலைமுறைகள் படிக்க வேண்டும் என பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் விரும்பினர். ஸ்டாலினும் அதையே விரும்புகிறார். ஆனால், தற்போது இதற்கெல்லாம் வழியில்லாமல் போய்விட்டது. இன்று, இறைவன் அருளால் முதல்வர் ஆனதாக ஒருவர் சொல்கிறார். இன்னொருவர் தியானம் செய்து நியாயம் கேட்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடத்தும் ஆட்சியால் தமிழகம் 10 வருடம் பின்தங்கி விட்டது. 

 

கலைஞர் ஆட்சியில், படித்தவுடன் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை கிடைத்தது. இப்போதுள்ள அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகள் அனைத்தும் இழுத்து மூடப்படுகிறது. இந்திரா காந்தியிடம் போராடி கலைஞர் பெற்றுத்தந்த சேலம் இரும்பாலையும், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஐடி பார்க்கும் முடங்கிக் கிடக்கின்றன. இதேபோல் நமது பிள்ளைகளின் மருத்துவ கனவும் கலைந்துவிட்டது. உயர்சாதிக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கிறார் மோடி. அதற்கு ஆதரவாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

 

நீட் தேர்வு எழுதாத மாணவர்கள்தான் இன்று உலக அளவில் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர். அவர்கள்தான் மோடிக்கும் கூட சிகிச்சை அளித்தார்கள். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற தேர்வுகள் கொண்டுவரப்படுகிறது. ஆனால் இந்த உரிமைகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கிறார். அவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருக்கின்றன. அதிலிருந்து தப்பிக்கவே மோடியின் சொல்லுக்கு எல்லாம் எடப்பாடி பழனிசாமி தலையாட்டுகிறார். 

 

கரோனா காலத்தில் மக்கள் படும் கஷ்டங்களைப் போக்க 7,000 ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். அப்போது கஜானா காலி என்று கைவிரித்தார் எடப்பாடி. இப்போது ரேஷனில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் கொடுக்கிறார். இது வரியாக நாம் செலுத்திய பணம்தான். இதைத்தான் நமக்குக் கொடுக்கிறார்கள். 10 ஆண்டுகளாக அவர்களை நம்பி ஏமாந்துவிட்டோம். எனவே உங்கள் பணத்தை வாங்கும் நீங்கள், அதில் மயங்கி ஏமாந்துவிடாதீர்கள். ஸ்டாலினுக்கு வாக்களித்து அவரை முதல்வராக்குங்கள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகிவிடும். 

 

கடந்த 10 ஆண்டுகளில் எந்த தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. இன்னும் நான்கு மாதத்தில் நீங்கள் செலுத்தும் வாக்கால் இதற்கு விடிவுகாலம் பிறக்கும். தமிழகம் நிச்சயம் முன்னேற்றம் காணும்.” இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

 

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பகுதி செயலாளர் கேபிள் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாள் சுபாஷ், மாநகர செயலாளர் ஜெயக்குமார், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் 'அசோக் டெக்ஸ்' அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.