Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்... -ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - கொடைக்கானலில் கஜா புயல் சேதப்பகுதிகளை பார்வையிட்ட தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கோரிக்கை...

Advertisment

i periyasamy

திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. அதை பார்வையிட சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கொடைக்கானலுக்கு செல்லும்போது பாதியிலேயே திரும்பி விட்டனர். ஆனால் திமுக உறுப்பினர்கள் நிவாரண பொருட்களை அனைத்து இடங்களுக்கும் கொண்டுசென்று சேர்த்து வருகின்றனர்.கடந்த நான்கு நாட்களாக பழனி சட்டமன்ற தி.மு.க உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார்மேல்மலை, கீழ்மலை, பள்ளங்கி, பெருமாள்மலை, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

Advertisment

தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி கொடைக்கானலில் உள்ள பெருமாள்மலை, கம்பம் நடராஜன் நகர், கீழ்மலை, கல்லறை மேடு, பெருமாள் மலை பிரிபு, கொடைக்கானல் நகர் முழுவதும் சென்று புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கொடைக்கானல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் புயல் எச்சரிக்கை குறித்து தங்களிடம் முறையாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குறை கூறினார்கள். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

i-periyasamy

கொடைக்கானலுக்கு வரும் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை புயல் மற்றும் மழைக்காலங்களில் சேதாரம் அடையாத அளவிற்கு அவற்றை அகற்றி இருக்க வேண்டும் அதை தவறியதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும் இன்று கொடைக்கானல் பலத்த சேதத்திற்கு ஆளாகி உள்ளது என்றார். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50ஆயிரம் நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததோடு, வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி உதவியுடன் கட்டப்படும் தொகுப்பு வீடுகளை உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளருடன் கொடைக்கானல் நகர செயலாளர் முகமது இப்ராஹிம், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, மாவட்ட தொண்டரனி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயகண்ணன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், 21வது வார்டு செயலாளர் சையது, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் செல்லத்துரை, பெருமாள் மலை ஆனந்தன், வில்பட்டி ஊராட்சி செயலாளர் மயில்சாமி, நகர துணைச் செயலாளர் சக்திமோகன், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், இலக்கிய அணி மாவட்ட துணை தலைவர் எ.பி.எம். பிச்சை, சிறுபான்மை வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் முகமது நயினார், நகர இளைஞரணி அமைப்பாளர் சேசுராஜ் (எ) குட்டி, மாணவரணி துணை அமைப்பாளர் டினோ ஜார்ஜ் உட்பட தி.மு.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளரிடம் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு முறையான நிவாரணம் வழங்கவில்லை என கண்ணீர் மல்க கூறியது கண்கலங்க செய்தது...

kodaikanal Dindigul district i periyasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe