Advertisment

ஓட ஓட வெட்ட முயன்ற தி.மு.க. கவுன்சிலரின் கணவர் கைது!

DMK COUNCILOR HUSBAND ARRESTED POLICE

Advertisment

கடனைத் திருப்பிக் கேட்ட நபர்களை பட்டப்பகலில் ஓட ஓட வெட்ட முயன்ற தி.மு.க. கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தத்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த நித்யா என்பவர் கவுன்சிலராக உள்ளார். அவரது கணவர் வெற்றிச்செல்வன், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், கடன் தொகையைத் திருப்பித் தராமல் குணசேகரனை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் வெற்றிச்செல்வன் வீட்டிற்கு சென்ற குணசேகரன், பணத்தைத் திருப்பி அளிக்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் வெற்றிச்செல்வன், தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அரிவாளை எடுத்து குணசேகரனையும், அவருடன் வந்தவர்களையும் ஓட ஓட வெட்ட முயன்றார்.

Advertisment

இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

trichy police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe