/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_105.jpg)
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாகர், இவர் நேற்று இரவு (28.09.2023) வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் இருந்த போது 30 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் முருகன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று கவுன்சிலர் சுதாகரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சுதாகர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக விசாரித்த போது 24 ஆவது வார்டு சுதாகர் என்பவரின் நண்பர் சரவணன், 30 ஆவது வார்டு கவுன்சிலர் முருகன் என்பவரின் நண்பரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும், இதற்கான வட்டி தொகையை சரவணன் 4 மாதங்களாக செலுத்தாததாகவும், இதனால் முருகன் தரப்பு பணம் வாங்கிய சரவணன் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டதாகவும், இது தொடர்பாக சரவணன் 24 ஆவது வார்டு கவுன்சிலர் சுதாகரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலில் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இரண்டு கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தனியார் ஹோட்டலில் இருந்த கவுன்சிலர் சுதாகரை சக கவுன்சிலர் முருகனின் ஆட்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)