Advertisment

ஆகஸ்ட் 19இல் திமுக ஆலோசனைக் கூட்டம்

DMK council meeting on August 19

கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து திமுக சார்பில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisment

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நூற்றாண்டு நாயகர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் சனிக்கிழமை (19.8.2023) காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள், அனைத்து அணிச் செயலாளர்கள், அமைச்சர்கள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ள வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத்தெரிவித்துள்ளார்.

Kalaignar100 kalaignar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe