சீன எல்லையில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் நேரில் ஆறுதல் கூறி 2 லட்சம் ரூபாய் வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா உட்பட்ட காடுகலுர் சேர்ந்த, சீன எல்லையில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கும்,அவரது உடன்பிறந்த தம்பி இதயக்கனியிடமும், அவரது மனைவி வானதி தேவியிடமும்திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், மாநில மகளிர் அணி துணை தலைவி பவானி ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் நேரில் ஆறுதல் கூறினர். அதோடுதிமுக மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்சா இராணுவ வீரரின் குடும்பத்திற்குஇரண்டு லட்ச ரூபாய் வழங்கினார்.