Advertisment

வாக்காளர்களுக்கு கொடுக்க அமைச்சர் கல்லூரியில் வேட்டி - சேலை... திமுக புகார்!

DMK complaint in viralimalai pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு,கடந்த ஒரு வருடமாகவே அமைச்சர் விஜயபாஸ்கரின் 'சிவிபி பேரவை' என்ற பெயரில் 6 முறை பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையும் மீறி தொடர்ந்து வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, தட்டு உள்ளிட்ட பரிசுப் பொருட்களைக் கட்சி நிர்வாகிகள் மூலம் வீடு வீடாக வழங்கி வருவதாகவும், இப்பொருட்களை அவருக்குச் சொந்தமான இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள கல்லூரியில் பதுக்கி வைத்திருப்பதாகவும், உடனடியாக இதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கக் கோரியும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையிலான திமுகவினர் விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Advertisment

நடவடிக்கை எடுக்கவில்லைஎன்றால் மாநிலத்தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்படும் என்றும்திமுகவினர் கூறியுள்ளனர்.

Advertisment

admk minister election commission Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe