நேற்று காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலையும், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகத்தையும் ஆதரித்து திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Advertisment

anbumani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அப்போது அவர், எதிரணியில் இருக்கும் திமுகவிற்கு சிறிது ஓட்டு உள்ளது, கூட்டணி கட்சிகள் எதற்கும் ஓட்டு கிடையாது. அப்போது தேர்தலில் என்ன நடக்கும், பூத்ல என்ன நடக்கும்... பூத்ல நாமதான் இருப்போம். சொல்றது புரியுதா, இல்லையா? நம்மதான் இருப்போம், நாமதான் இருப்போம். அப்பறம் என்ன? சொல்லணுமா வெளியில, புரிஞ்சுகிட்டிங்கள்ல என்று கூறினார். இது மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில்,

Advertisment

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் தெரிவித்துள்ளது. திமுகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கிரிராஜன் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும், தமிழக தேர்தல் தலைமை அதிகாரிக்கும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

நேற்று திருப்போரூர் மற்றும் காஞ்சிபுரம் மக்களவை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தபோது எதிரணியில் இருக்கும் திமுகவிற்கு சிறிது ஓட்டு உள்ளது.கூட்டணி கட்சிகள் எதற்கும் ஓட்டு கிடையாது. அப்போது தேர்தலில் என்ன நடக்கும், பூத்ல என்ன நடக்கும்... பூத்ல நாமதான் இருப்போம். சொல்றது புரியுதா, இல்லையா? நம்மதான் இருப்போம், நாமதான் இருப்போம். அப்பறம் என்ன? சொல்லணுமா வெளியில, புரிஞ்சுகிட்டிங்கள்ல என்று கூறினார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இது கள்ள ஓட்டு போடுவதற்கு தூண்டுவதற்கான விஷயம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விதி 135 ஏபடி இது மூன்று வருட தண்டனைக்குரிய குற்றமாக வருகிறது. திமுக உடன் 7 தொகுதிகள் நேருக்கு நேராக பாமக மோதுகிறது. பூந்தமல்லி, சோளிங்கர், குடியாத்தம், திருப்போரூர், ஆம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய தொகுதிகளிலும் பராமிலிட்டரி போர்ஸ் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தி அன்புமணி மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.