‘இ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’  - எஸ்.பியிடம் திமுக பரபரப்பு புகார்

 DMK complained to the Trichy SP that action should be taken against eps

அதிமுக மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பலர் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட திமுகவினரை ஒருமையிலும் ஆபாச வார்த்தைகளாலும் பேசியிருக்கின்றனர். இதையடுத்து தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் முரளி கிருஷ்ணன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்ட எஸ்.பி அருண்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது: “மதுரையில் நேற்று நடந்த அதிமுக மாநாட்டில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டவர்களை ஆபாசமாகவும் அவதூறாகவும் அநாகரிகமான முறையில் பேசியுள்ளனர். தனிமனித சுதந்திரத்தை கொச்சைப்படுத்தியும் உண்மைக்கு மாறான தகவல்களையும் பேச வைத்து பாட்டு பாட வைத்து அதனை ரசித்த எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

admk trichy
இதையும் படியுங்கள்
Subscribe