Advertisment

தோ்தலுக்கு முன் கலவரத்தை அரங்கேற்ற நினைக்கிறாரா? பொன்.ராதாகிருஷ்ணன்... திமுக, மா.கம்யூனிஸ்ட் கண்டனம்!

பாராளுமன்ற தோ்தலில் கன்னியாகுமாியில் பொன் ராதாகிருஷ்ணன் தோல்வியை அவரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் அவா் மைக் பிடிக்கும் போதும் நிருபா்களுக்கு பேட்டியளிக்கும் போதும் திமுக, காங்கிரசை நேரடியாகவும்,குமாி மாவட்ட கிறிஸ்தவ, முஸ்லீம்களை மறைமுகமாகவும் சாடி வருவதாகதிமுகவும், காங்கிரசும் குற்றம் சாட்டி வந்தனா்.

Advertisment

இந்த நிலையில் திமுக மா.செ சுரேஷ்ராஜன் மற்றும் மா.கம்யூ மா.செ செல்லசுவாமி இருவரும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு கண்டனம் தொிவித்துள்ளனா்.

DMK, Communist condemnation to Pon. Radhakrishnan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதில் குமாி மாவட்டத்தில் பல்வேறு மதம், மொழி, இனம் சாா்ந்த மக்கள் வாழுகிறாா்கள். அவா்களுக்குள் ஓற்றுமையும் சகோதரத்துவத்தையும் பாதுகாத்து வருகிறோம். அப்படிபட்ட மக்களின் எண்ணங்களில் மதம் எதுவாக இருந்தாலும் மனித நேயமும்ஒற்றுமையும் தான் முக்கியமென்று வாழுகின்றனா். ஒரே குடும்பமாக அண்ணன் தம்பியாக இந்து, கிறிஸ்தவா், இஸ்லாமியா் என அனைவரும் ஒற்றுமையாக வாழும் இந்த குமாி மாவட்டத்தில் அவா்களுக்குள் ஒரு கலவரத்தை அதுவும் தோ்தலுக்கு முன்பாக உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் நினைக்கிறாா். இது அவா் பொது இடங்கள் மற்றும் குடியுாிமை ஆதரவுக்கான கூட்டத்தில் பேசிய பேச்சே வைரலாக பரவி வருவதற்க்கு உதாரணம் என்றியிருக்கிறாா் திமுக மா.செ சுரேஷ்ராஜன்.

DMK, Communist condemnation to Pon. Radhakrishnan

மா.கம்யூ. மா.செ செல்லசுவாமியோ...குமாி மாவட்டத்தில் பொன் ராதாகிருஷ்ணன் கலவரத்தை ஏற்படுத்தும் பணியை தொடங்கி விட்டாா். குடியுாிமை சட்டம் விளக்கம் கூட்டம் என்ற பெயாில் நடத்தும் கூட்டங்களில் வன்முறையை தூண்டும் வகையில் மத வெறியை தூண்டும் முறையில் அவாின் ஆவேச பேச்சு அனைத்து சமூக ஊடகங்களிலும் உலா வந்து கொண்டியிருக்கிறது. மத வேறுபாடியின்றி சகோதரா்களாக வாழும் மக்களை பிாித்து அச்சுறுத்தி வன்முறையை ஏவி விடும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது அமைதியை விரும்பும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

citizenship amendment bill Kanyakumari Pon Radhakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe