dmk chief mkstalin chief minister swearing oath ceremoney

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்கிறார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைக்கிறார்.

Advertisment

பின்னர், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றுக்கொள்கிறது. செந்தில் பாலாஜி, ஐ. பெரியசாமி, துரைமுருகன், கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கீதா ஜீவன், பொன்முடி, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மதிவேந்தன் உள்ளிட்ட 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்கின்றனர்.

Advertisment

பதவியேற்பு விழாவில்வைகோ, திருமாவளவன், ப. சிதம்பரம், முத்தரசன், கி. வீரமணி, வேல்முருகன், ஈஸ்வரன், காதர் மொய்தீன், கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர்,சரத்குமார், கமல்ஹாசன்உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், அதிமுகசார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், நவநீதகிருஷ்ணன், தனபால் மற்றும் பாஜகசார்பில் இல. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.