Skip to main content

தலை நிமிர்ந்து வருகிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

kalaignar birthday dmk chief and chief minister mkstalin tweet



தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி, திமுகவின் தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

 

அதில், "கம்பீரமாக வருகிறேன், தலைநிமிர்ந்து வருகிறேன்; வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன். தந்தை கலைஞருக்குத் தந்த வாக்குறுதியைத் தொண்டர்களின் துணையுடன் நிறைவேற்றிவிட்டேன். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று உருவகப்படுத்தினீர்கள்; அதற்கு உண்மையாக இருக்கிறேன். திமுகவுக்கு வாக்களிக்கத் தவறியர்களின் பாராட்டையும் பெறும் வகையில் செயல்பட்டுவருகிறேன். ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் கரோனாவுக்கு எதிராக திமுக அரசு போராடிவருகிறது. கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு தொடர்ந்து போராடிவருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்