தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

DMK CHIEF AND Chief Minister MK Stalin's consultation with district secretaries!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (18/12/2021) மாலை 06.00 மணியளவில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், அமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.பன்னீர்செல்வம், 77 மாவட்டச் செயலாளர்கள், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் தொடர்பாகவும், தேர்தலுக்கு தயாராவது, கட்சியின் வளர்ச்சிப் பணிகள், வேட்பாளர்களை அடையாளம் காண்பது, கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவது உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

discussion Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe