Advertisment

குடகுமலையை அடகு வைத்தது திமுகதான் -அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

Advertisment

அதிமுக எங்களுடையதுதான், இரட்டைஇலைஎங்களுடையதுதான் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு அதை விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதியில்லை. பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.

JAYAKUMAR

அதிமுக பாஜகவிற்கு ஒத்து ஊதுகிறது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, திமுக ஆட்சியில்தான் 1974 இந்திராகாந்தி அம்மையாருக்கு ஒத்து ஊதி காவிரியையும், குடகு மலையையும் அடகு வைத்தது,கச்சத்தீவை காவுகொடுத்தது,காவிரி உரிமையை விட்டுத்தந்தது, அதேபோல் சோனியாகாந்தி அம்மையார் ஆட்சியிலே இருக்கும்பொழுது காங்கிரசுக்கு ஒத்து ஊதி நீட், கதிராமங்கலம், மீத்தேன், என தமிழத்தின் எல்லா உரிமைகளையும் விட்டுக்கொடுத்து உரிமையை இழக்க செய்தது திமுகதான் என்பது மக்களுக்கு தெரியும் எனவே அதிமுக பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறது என்பதை மக்கள் ஒத்துக்கொள்ளாத ஒன்று.

Advertisment

கமல் கட்சி ஆரம்பித்த கொஞ்சநாளிலேயே அந்தக்கட்சியின் அட்வகேட் ஒருவர் விலகிவிட்டார். அதேபோல் ஸ்ரீப்ரியாவும் விலகவுள்ளார் என்ற செய்திகள் உங்களிடம் இருந்து வந்துகொண்டிருக்கிறது. எனவே 16 பேரை சரியாக கட்டிகாக்க தெரியாத கமல்ஹாசன் எப்படி நாட்டை நிர்வகிக்க போகிறார் என்பதை யோசித்து பாருங்கள்எனவே யானை யானைதான், எறும்பு எறும்புதான்.

ஆளுநர் அதிமுக ஆட்சியை பாராட்டியிருப்பது ஒரு நற்சான்றிதழ் அதை வைத்து முடுச்சுபோடக்கூடாது எனக்கூறியுள்ளார்.

admk jayakumar M K Stalin descriptions
இதையும் படியுங்கள்
Subscribe