புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் பொன்னமராவதியில் புதிய நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து பொன்னமராவதியில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்தை நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேரூராட்சி சேர்மன் சுந்தரி அழகப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த படங்கள், வீடியோக்கள் வெளியானது.
நீதிமன்ற நடைமுறைக்கு மாறாக நீதிமன்றத்தை உள்ளாட்சி பிரதிநி திறந்து வைத்ததாக கொடுத்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலிசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நீதிமன்றம் திறந்தசம்பவத்தில் நீதிமன்ற பணியாளர்கள் 8 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.