'DMK case will continue...' - CM wears black armband to protest

இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் சொத்துக்களை நிர்வகிப்பதற்கு ‘வக்ஃப் வாரியம்’ என்ற சட்டப்பூர்வ அமைப்பு உள்ளது. இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்கு கடந்த 1954ஆம் ஆண்டில் வக்ஃப் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதன் பின்னர் திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தின்படி, 1995 ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் கீழ், பள்ளிவாசல்கள், மதராஸக்கள், அறக்கட்டளை போன்றவற்றை பராமரிப்பது மட்டுமல்லாமல், இந்த வாரியத்தில் இருந்து வரும் வருமானத்தை சேகரித்து மத, கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக வக்ஃப் வாரியத்தின் கீழ் தான் அதிக சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதாவை கடந்தாண்டு மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. அந்த மசோதாவில், இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமியர் அல்லாதோர் வக்ஃப் வாரியத்தில் இடம்பெற செய்வது, வக்ஃப் நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவதும் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றது. இந்த மசோதாவிற்கு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத் திருத்த மசோதாவில் கடும் சர்ச்சைகள் இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்தது.

Advertisment

இந்த கூட்டத்தில் இடம்பெற்ற திமுகவின் எம்.பி ஆ.ராசா, அப்துல்லா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகள் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பையும் மீறி, ஆளுங்கட்சி முன்வைத்த திருத்தங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு 655 பக்கங்கள் கொண்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதா அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

'DMK case will continue...' - CM wears black armband to protest

இந்நிலையில், வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று நள்ளிரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே தமிழக அரசு வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இருந்த நிலையில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று தமிழக முதல்வர் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Advertisment

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா மத நல்லிணக்கத்தை குறைக்கும் செயல் என குறிப்பிட்டுள்ள முதல்வர், 'நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.நள்ளிரவு 2 மணி அளவில் வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது அரசமைப்பு மீதான தாக்குதல். பெரும்பாலான கட்சிகளின் எதிர்பார்ப்பையும் மீறி சட்டத்தின் நிறைவேற்றியது கண்டனத்திற்குரியது. ஒரு சில கூட்டணி கட்சிகளின் தயவால் நள்ளிரவு இரண்டு மணி அளவில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 232 பேர் சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தது சாதாரணமானது அல்ல. இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும். சிறுபான்மை மக்களின் உரிமைக்காக தமிழ்நாடு என்றும் போராடும்' என தெரிவித்துள்ளார்.