DMK captures Trichy Corporation

Advertisment

தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128 நகராட்சிகளிலும், அதிமுக 6 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 489 பேரூராட்சிகளில், திமுக கூட்டணி 358 பேரூராட்சிகளிலும், அதிமுக 24 பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன.

அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்திலும், திமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

அதன்படி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் 34 வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி:

திமுக - 23

காங்கிரஸ் -4

சிபிஐ - 1

சிபிஎம் -1

மதிமுக - 2

அமமுக -1

அதிமுக -1

விசிக - 1

லால்குடி நகராட்சி 24 வார்டுகள்:

திமுக - 17

அதிமுக - 4

சுயேட்சை - 2

திமுக கூட்டணி கம்யூனிஸ்ட் - 1

துவாக்குடி நகராட்சி 21 வார்டுகள்:

திமுக - 14

மதிமுக - 1

அதிமுக - 1

அமமுக - 1

விசிக - 1

சுயேச்சை - 3

முசிறி நகராட்சி 24 வார்டுகள்:

திமுக -14

மதிமுக - 1

விசிக - 1

அதிமுக - 4

அமமுக - 2

தேமுதிக - 1

சுயேட்சை - 1

காட்டுப்புத்தூர் பேரூராட்சி 15 வார்டுகள்:

திமுக - 9

அதிமுக - 2

சுயேட்சைகள் 2

காங்கிரஸ் - 1

விசிக - 1

சிறுகமணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள்

திமுக - 8

அதிமுக - 2

காங்கிரஸ் - 1

சுயேட்சை - 4

கூத்தைபார் பேரூராட்சி 18 வார்டுகள்:

திமுக - 14

காங்கிரஸ் - 1

சிபிஐ - 1

சிபிஎம் - 1

மதிமுக - 1

பொன்னம்பட்டி பேரூராட்சி 15 வார்டுகள்:

சுயேட்சை - 6

திமுக - 4

அதிமுக - 2

விசிக - 1

மனிதநேய மக்கள் கட்சி - 1

தேமுதிக - 1

உப்பிலியபுரம் பேரூராட்சி 15 வார்டுகள்:

திமுக - 8

அதிமுக - 6

சுயேட்சை - 1

கரூர் மாநகராட்சி:

மொத்த வார்டுகள்: 48

திமுக - 41 + 1 (22வது வார்டு ஏற்கனவே போட்டியின்றி தேர்வு)

காங்கிரஸ் - 1

சிபிஎம் - 1

அதிமுக - 2

சுயேட்சை - 2

Advertisment

திமுக கூட்டணி 44 இடங்களில் வெற்றி பெற்று கரூர் மாநகராட்சியை கைப்பற்றியது.

மேலும், கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில், 23 வார்டுகளை திமுகவும், ஒரு வார்டை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன. குளித்தலை நகராட்சி திமுக தன் வசப்படுத்தியுள்ளது.