திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

dmk

இன்று மாலைஅண்ணா அறிவாலயத்திற்கு மு க ஸ்டாலின், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வருகை தந்தனர். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முக ஸ்டாலின்,

17வது இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் நாள் தமிழகம் எதிர்கொள்ளஇருக்கின்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும், திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை இப்பொழுது உங்கள் முன் வைக்க இருக்கிறேன்.

சென்னை வடக்கு-கலாநிதி வீராசாமி

சென்னை தெற்கு- முனைவர் சுமதி என்கின்ற தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை -தயாநிதிமாறன்

திருப்பெரும்புதூர் -டி ஆர் பாலு

காஞ்சிபுரம் தனித் தொகுதி -ஜி செல்வம்

அரக்கோணம் -எஸ்ஜெகத்ரட்சகன்

வேலூர் -கதிர் ஆனந்த் என்கிறசிவபுரி

தர்மபுரி டாக்டர் -செந்தில்குமார்

திருவண்ணாமலை -சி என் அண்ணாதுரை

கள்ளக்குறிச்சி- டாக்டர் கௌதம் சிகாமணி

சேலம் -எஸ்.ஆர்.பார்த்திபன்

நீலகிரி தனிதொகுதி -ஆ ராசா

பொள்ளாச்சி- கு.சண்முகசுந்தரம்

திண்டுக்கல் -வேலுச்சாமி

கடலூர் -டி.ஆர்.பி.எஸ் ஸ்ரீ ரமேஷ்

மயிலாடுதுறை -ராமலிங்கம்

தஞ்சாவூர் -எஸ் எஸ்.பழனிமாணிக்கம்

தூத்துக்குடி- கனிமொழி

தென்காசி தனி தொகுதி -தனுஷ் எம் .குமார்

திருநெல்வேலி -ஞானதிரவியம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட இருக்கிறார்கள் என அறிவித்தார்.

18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல்,

பூந்தமல்லி தனித் தொகுதி -கிருஷ்ணசாமி

பெரம்பூர் -ஆர் டி சேகர்

திருப்போரூர் -செந்தில் என்கின்ற எஸ்.ஆர் இதய வர்மன்

சோழிங்கர்-அசோகன்

குடியாத்தம் தனிதொகுதி -எஸ் காத்தவராயன்

ஆம்பூர் -வில்வநாதன்

ஓசூர்-எஸ்.ஏ சத்யா

பாப்பிரெட்டிபட்டி- மணி

அரூர்தனித்தொகுதி -கிருஷ்ணகுமார்

நிலக்கோட்டை தனி -சௌந்தரபாண்டியன்

திருவாரூர்-பூண்டி கலைவாணன்

தஞ்சாவூர்- நீலமேகம்

மானாமதுரை தொகுதி -கரு.காசிலிங்கம் என்கின்ற இலக்கியதாசன்

ஆண்டிப்பட்டி -மகாராஜன்

பெரியகுளம் தனித்தொகுதி -சரவணகுமார்

பரமக்குடி தனித்தொகுதி- சம்பத்குமார்

சாத்தூர் -எஸ் விஸ்ரீனிவாசன்

விளாத்திகுளம் -ஏசி ஜெயக்குமார்

ஆகிய 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நான் அறிவித்திருக்கிறேன்.தொடர்ந்து புதுவை மாநிலத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கே.வெங்கடேசன் போட்டியிடுகிறார் எனக்கூறினார்.

byelection elections
இதையும் படியுங்கள்
Subscribe