லால்குடியில் திமுக வேட்பாளர் வெற்றி!

DMK candidate wins in Lalgudi

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 157 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 77 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னனியில் உள்ளது.

இந்நிலையில் திருச்சி லால்குடி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 22 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் சௌந்திரபாண்டியன் 83,264 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட தமாகா வேட்பாளர் தர்மராஜ் 67,212 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். திமுக வேட்பாளர் சௌந்திரபாண்டியன் 16,052 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe