நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குஎண்ணிக்கை தொடர்ந்துநடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில்26 சுற்றுகளுடன்வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது.
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ் ஆர் பார்த்திபன் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்திகளத்தில் வெற்றிபெற்றுள்ளார்.