தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன. பல்வேறு பரபரப்புகளுக்கிடையேஇன்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுகவில் 70 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராகவிக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆதரவு கேட்டுசென்றபோது திமுக நிர்வாகி தனசேகரனின் ஆதரவாளர்கள்பிரபாகர் ராஜா மீதுகற்கள் வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.