DMK candidate list ... Stalin announces date!

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால்,தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரச்சாரம்,கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனதீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், திமுகதலைவர் ஸ்டாலின் வீட்டிலிருந்தே காணொலி காட்சிமூலமாகமாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisment

கடந்த மார்ச்1 ஆம் தேதிசென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுகதலைவர் ஸ்டாலின், “வரும் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுகமாநாட்டில், தமிழகத்தின் 10 ஆண்டுகளுக்கான எனதுதொலைநோக்கு பார்வையை அறிவிக்கஉள்ளேன்.இன்னும் இரண்டு மாதத்தில் ஆட்சிமாற்றம்நடைபெறும்,” என்று கூறியிருந்த நிலையில், வரும் மார்ச்7 அன்று நடைபெற இருக்கும்பொதுக்கூட்டம் குறித்துமாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஒருபுறம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், வரும் மார்ச் 10 ஆம் தேதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலைவெளியிட இருப்பதாக மாவட்டச் செயலாளர்கள் உடனான கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment