DMK candidate interview to continue for the third day

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.அதனையடுத்து 28/02/2021 அன்று மாலை 05.00 மணிக்கு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது. இதுவரை 8,388 விண்ணப்பங்களை விநியோகித்த கட்சித் தலைமை, 7,967 பேர் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை மாவட்ட வாரியாகநடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (04.03.2021) தொடர்ந்து மூன்றாவது நாளாக திமுக வேட்பாளருக்கானநேர்காணல் நடைபெற்று வருகிறது.