/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/987_11.jpg)
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் சித்துரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே சில இடங்களில் வேட்பாளர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்து வருகிறார்கள். இதுவரை தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் மரணமடைந்துள்ளதால் அந்த இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் இரண்டாவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சித்துரெட்டி என்பவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)