சட்டமன்ற உறுப்பினரின் வீட்டுக் காதணி விழாவில் ரூபாய் 11 கோடி மொய்ப்பணம் வசூலாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமாரின் பேரக் குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. இதற்காக, தொகுதி முழுவதும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, ஏராளமான பொதுமக்கள், தி.மு.க. கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
1,200 கிலோ கறி விருந்து சமைக்கப்பட்டு, சுமார் 5,000- க்கும் மேற்பட்டோருக்கு விருந்து பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் மொய் எழுதுவதற்காக 18 இடங்களில் தனியாக, பந்தல் அமைக்கப்பட்டன. மொய்ப்பணத்தை எண்ணுவதற்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதில் 11 கோடி ரூபாய் மொய்ப்பணம் வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.