
அண்மையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பாஜகவை சேர்ந்தவர்கள் ஆ.ராசா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஆ.ராசா பேசுகையில், ''ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் இந்துக்களை புண்படுத்திவிட்டார் என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்பது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. மன்னிப்பு கேட்பது என்பது மனித மாண்பு. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னால் அவனை விட முட்டாள், வறட்டுத்தனமான அயோக்கியன் யாருமே கிடையாது. யாரு தப்பு செய்தாலும் மன்னிப்பு கேட்கவேண்டும். நான் மன்னிப்பு கேட்க தயார். என்ன மன்னிப்புனு சொல்றா லூசு. நான் 2 ஜியவே பார்த்தவன் இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் என்னிடம் வெச்சுக்கக்கூடாது.
அப்போ இருந்த இந்து மதம் இப்போ இல்லனு சொல்ற. எனக்கு ஒரு கேள்வி நான் ஏன் பெரியார் திடலில் பேசினேன். இந்துக்களும் நான் எதிரி அல்ல. சனாதனம் பேசுகிற இந்து வேற, அரசியல் சட்டம் சொல்கிற இந்து வேற. சனாதனம் பேசுகிற இந்து ஆர்.என்.ரவி, சனாதனம் பேசுகிற இந்து சங்கராச்சாரி, சனாதனம் பேசுகிற இந்து அவாள், சனாதனத்திற்கு வெளியில் இருப்பது பாவம் அண்ணாமலை, பாவம் வானதி சீனிவாசன், பாவம் எடப்பாடி பழனிசாமி, பாவம் ஓ.பன்னீர்செல்வம். அரசியல் சட்டத்தை எடுத்துக் கொண்ட ஆளுநர் சொல்கிறார் சனாதன தர்மம் தான் சிறந்தது என்று சொன்னால் நான் சொல்கிறேன் அரசியல் சட்டத்தின் மீது நீங்கள் எடுத்த உறுதிமொழி உண்மையாக இருக்குமானால் அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கும் சனாதனம் எது என்று தெரியுமா உங்களுக்கு'' என்றார்.